வாட்ஸ் அப்பில் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பில் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகலாவிய ரீதியில் மிக பிரபலமான வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து ஈர்ப்பில் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய அப்டேட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகின்றது.

புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் குழு அரட்டை, குழு வாய்ஸ் அழைப்பு, வீடியோ அழைப்பு வசதி போன்றவை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதுமட்டுமன்றி தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசக்கூடிய ஆடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் | Whatsapp Call 32 People Can Talk In Sametiimes

இந்த ஆடியோ சாட் அம்சத்தில் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு மணி ஒலிக்காமல், அதற்கு பதிலாக ‘PUSH NOTIFICATION’ என்ற அழைப்பு முறை அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆடியோ சாட்டில் உறுப்பினர்கள் இணைந்த பிறகு, குழுவினரால் நேரடியாகவும், குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும் என தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் | Whatsapp Call 32 People Can Talk In Sametiimes

எனினும் குழுவில் 33 முதல் 128 பேர் வரையிலான உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே இந்த ஆடியோ சாட் வசதியை பயன்படுத்த முடியும் என்பதுடன் இந்த ஆடியோ சாட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய 2 தளங்களிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *