- Advertisement -
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தை இயக்குவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மின் பிறப்பாக்கி இயந்திரம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை கணினியில் இணைப்பதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலைமை காரணமாக மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
- Advertisement -