- Advertisement -
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று மதியம் உயிரிழந்துள்ளார். கந்தசாமி தர்ஷன் (வயது 31) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- Advertisement -