- Advertisement -
நிந்தவூர் மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று 2023.11.17 மாலை இடம் பெற்று மோட்டார் சைக்கிள் – பஸ் வண்டி விபத்தில் காயமடைந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்
மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது
உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என தெரிய வந்துள்ளதுடன் இவர்கள் இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷிப்லி அஹ்மட் தெரிவித்ததாவது..
நான் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சி மிக்கவை.
ஒருவர் உயிரிழந்த நிலையிலும் மற்றவர் குற்றுயிராய் கிடந்த நிலையும் நீண்ட காலங்கள் என்னை தொல்லை செய்யும்.
தயவு செய்து வேகமாக மோட்டார் வாகனம் ஓட வேண்டாம் என்று உரக்கக் கூவ வேண்டும்.
- Advertisement -