Friday, December 8, 2023
Homeஇலங்கைகர்ப்பிணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய மகிந்த..!

கர்ப்பிணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய மகிந்த..!

- Advertisement -

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் நிதியுதவி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் வழங்கப்பட்டது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மகிந்த ராஜபக்ச மற்றும் வந்திருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகா சங்கரத்னய பிரித் ஓதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இதேவேளை, நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால், நிகழ்வின் பின்னர் வெளியில் வந்த மகிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தனக்கு எதுவும் தெரியாது என்றும், வேறு ஒருவர் ஏற்பாடு செய்திருந்த தான நிகழ்வுக்கு தான் வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் – பொதுத் தேர்தலா? ஜனாதிபதி தேர்தலா? வரும்…

மகிந்த – “அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.”

ஊடகவியலாளர்கள் – இப்போது எப்படி தயாராக உள்ளீர்களா?

மகிந்த – “நன்றாக தயார் உள்ளோம்.”

ஊடகவியலாளர்கள் – கட்சிக்கு தலைவர் ஒருவரை போடுவீர்களா?  எங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்க முடியுமா?

மகிந்த – “பார்ப்போம். அதை சொன்னால் வௌியே வந்து விடுமே.”

ஊடகவியலாளர்கள் – நீங்கள் இருந்த காலத்தை போல பட்ஜெட்டில் ஒன்றும் இல்லையே?

மகிந்த – “எங்களை வேண்டாம் என்றார்கள். இப்போது புதிய குழு வந்துள்ளது. பார்ப்போம்.”

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments