- Advertisement -
உடற்பயிற்சியின் போது கடின எடை கொண்ட உடற்பயிற்சி உபகரணம் கழுத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உடலை சமப்படுத்துவதற்காக இரு கைகளால் மேல்நோக்கித் தூக்கப்படும் இரும்பிலான அதிக எடை கொண்ட உபகரணம் ஒன்றே சமநிலை தவறி, அவரது கழுத்தில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரிஷான்டன் மோசஸ் என்ற 33 வயதுடையவராவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- Advertisement -