வாடகை வாகனம் என்ற போர்வையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கத்தியால் குத்தி கொள்ளை அடித்த சம்பவம் ஒன்று வாத்துவ, தல்பிட்டிய, லோலுகஸ் மங்கட சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுக்கும் இடத்திற்கு வந்து பாணந்துறை, பின்வத்த பகுதிக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
பின்னர் பின்வத்த பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, மேலும் இருவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பாணந்துறை, பின்வத்தை புகையிரத நிலையத்திற்கு சென்ற மூவரும் முச்சக்கரவண்டி சாரதியை இறங்குமாறு கூறியுள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதி வாகனத்தை விட்டு இறங்க மறுத்ததை அடுத்து, மூவரில் ஒருவர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து வயிற்றிலும் மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி பயந்து முச்சக்கரவண்டியை விட்டுவிட்டு அந்தப் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஓடியுள்ளார்.
இதன்போது முச்சக்கரவண்டியில் வந்த மூவரும் முச்சக்கரவண்டியை கொள்ளை அடித்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வாதுவ, தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டிசாரதியின் பெற்றோர் பின்வத்த பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.