- Advertisement -
எம்பிலிபிட்டிய – யாழ்ப்பாணம் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை – அவிசாவளை வீதியில் குருணேகொட தேவாலயத்திற்கு அருகில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து வீதியோரத்தில் உள்ள கடைக்குள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -