- Advertisement -
பண்டாரவளை, துல்கொல்ல பிரதேசத்தில் இன்று (15) பெண் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸின் முன்பாக வீதியைக் கடக்கச் சென்ற போது, அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மகுல் எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸின் முன்பாக வீதியைக் கடக்கச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -