Tuesday, December 5, 2023
Homeஇலங்கையாழில் 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

யாழில் 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

- Advertisement -

பிறந்து நான்கு மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று  யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தவறான சிகிச்சையாலேயே குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை தனது முகப்புத்தகப்பதிவில் தெரிவிக்கையில் ,

கடந்த 07.07.2023 அன்று மகன் கோஷரண் முருகன் அருளால் எங்கள் கோயில் பூசை நாளில் வந்துதிதான். அழகன் முருகனைப் போலவே பிறந்தான்…

இந்நிலையில் எங்கள் மகனுக்கு Operation யாழ்ப்பாணம்  வைத்திய சாலையில் 09.10.2023அன்று நடந்து முடிந்தது. எந்த வித பிரச்சினையும் இல்லாமல் Paediatric Surgeon Dr Ranjitha tharsana வும் அவரது குழுவினரும் மிகவும் அவதானமாக செய்து முடித்தனர்.

அதன் பின்னர் 12ம் இலக்க‌ விடுதியில் 11ம் திகதியில் இருந்து 14ம் திகதி வரை அவனது நிறைக்கேற்ற அளவு அல்லாமல் கூடுதலான Antibiotic sealine மூலமாக உட் செலுத்தப் பட்டு கொடுக்கப் பட்ட மருந்துகள் அனைத்தும் Tissue க்களுக்குள் சென்றும் நுரையீரலுக்குள் தேங்கியும் உள்ளதெனவும் கூறி 14ம் திகதி இரவு ICU வில் அனுமதித்து மேலும் அந்த பிஞ்சு உடலில் மருந்துகள் ஏற்றப்பட்டு 16ம் திகதி செயற்கை சுவாசம் கொடுக்கப் பட்டு எங்கள் மகனை சாகடித்து விட்டார்கள்.

12ம் இலக்க விடுதிக்கு பொறுப்பான வைத்தியர் மற்றும் விடுதியில் கடமை புரிந்த பெண் வைத்தியர்கள்,  தாதிகளுக்கு கடவுளால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.  கிடைக்க வேண்டும்.. ஏதோ ஒரு விதத்தில் அனுபவிப்பார்கள்.

(குறிப்பு: Dr Ranjitha tharsana, Dr Suthesana, Dr Sutharsini ஆகியோருக்கும் அவர்களோடு இணைந்த ஏனையோருக்கும் எங்கள் நன்றிகள் ) பணம் சம்பாதிக்க ஓடுவதை விட்டு அரச வைத்திய சாலையில் சிறந்த சேவையை செய்யுங்கள். முதலில் எப்படி ஒருவருடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments