- Advertisement -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு மருங்கையேனும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -