பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கொள்ளைக் கும்பல் மருதமுனை மக்களால் மடக்கிப் பிடிப்பு
மருதமுறையில் பிரபலமான நகைக்கடையொன்றில் நகைக்கடை உரிமையாளர் தனிமையில் இருந்த வேளை நகை வாங்குவதாகக் கூறிக்கொண்டு கடைக்குள் நுழைந்த கறுப்புநிறக் காரில் வந்த 3 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய திருட்டு கும்பலை மருதமுனை மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் இன்று (15.11.2023) இடம்பெற்றுள்ளது.
இவர்கள் சாந்தமருது மற்றும் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது. தனிமையில் இருந்த வயதான நகைக்கடை உரிமையாளரிம் நகையைப் பெற்றுக்கொண்டு ஓட முற்பட்டவேளை மருதமுனை மக்களால் மடக்கிப்பிடித்து கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் கல்முனை பொலிஸ் விசாரணையில்