புத்தளத்தில் விற்றராசின்(காட்ட)கூர் முனை குத்தி இளைஞன் உயிரிழப்பு
புத்தளத்திலுள்ள அரசாங்க விடுதியொன்றிலிருந்து (15) காலை புத்தளம் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் இன்று காலை 6 மணிக்கும் 6.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் குளியலறையில் வைத்து விற்றராசினை கையில் எடுத்து தனது இரு கைகளினாலும் நேராக இழுக்க முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனது கைகளால் தனது விற்றராசினை இழுத்த போது, குறித்த தராசின் முன்பக்க கூர் பகுதி இளைஞனின் கழுத்தில் குத்தி காயப்படுத்தியுள்ளது.குறித்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் குறித்த இளைஞரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்தனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த (சா /த ) பரிட்சையில் புத்தளம் கல்வி வலயத்தில் 9 A சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.