அச்சிடப்பட்ட மின்கட்டண பட்டியல் முறைமையை நிறுத்தும் வகையில், பயனாளர்களுக்கு மாத்திரம் மின்கட்டணத்தை வழங்கும் E-Bill சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபை தமது பயனாளர்களுக்கு E-Bill சேவைக்கு பதிவு செய்யுமாறு கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ebil.ceb.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இணையத்தளத்திற்குச் சென்று அல்லது EBILL – மின்சாரக் கணக்கு எண் – மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு குறுந்தகவலை (SMS) 1987 எனும் இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் E-Bill சேவைக்கு பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கின்றது.