வவுனியாவில் இடம் பெற்ற சம்பவம் கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!
வவுனியா தரணிக்குளம் குறிசுட்ட குளம் பகுதியில் இன்று பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப்பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதையடுத்து குறித்த சடலம் இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரு கையும் காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இவர் (26) வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் எனவும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாகவும்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…