- Advertisement -
அறநெறி பாடசாலைகளின் இறுதி பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி, இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், கத்தோலிக்க மற்றும் பௌத்த அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் விதம் குறித்த விடயங்களை அறநெறி பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது
- Advertisement -