Monday, December 11, 2023
Homeஇலங்கைகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நட்டஈடு..?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நட்டஈடு..?

- Advertisement -

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.

* விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.

* மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பால்பண்ணையாளர்களுக்கு விசேட திட்டங்கள் – பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள்

* கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்கள் – அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டம்.நிர்மாணப்பணிகளுக்கு விசேட உதவித்திட்டங்கள் – வீடமைப்புத் திட்டங்களை வழங்கி நிர்மாணத்துறையினருக்கு ஊக்குவிப்பு

* துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம். திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை

* வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு

* வடக்கு குடிநீர் விநியோக திட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

* பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* பண்டாரவளை பொருளாதார நிலையம் அமைக்க திட்டம் – 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments