- Advertisement -
அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் மூன்று வருட ஹெட்ர்டிக் தொடர் சம்பியனாக சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபிலுல் லமாஹ் சாதனை நிலைநாட்டிள்ளார்.
இலங்கை செஸ் சம்மேளன ஏற்பாட்டில் தேசிய யூத் செஸ் சம்பியன்சிப் 2023, போட்டிகள் அம்பாறை டி.எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலையில் கடந்த 11,12ம் திகதிகளில் நடைபெற்றது.
இதில் அல் ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபிலுல் லமாஹ் 09 வயது பெண்கள் பிரிவு சதுரங்க போட்டியில் வெற்றியீட்டி தொடராக 3 வருடகாலமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளார்.
இதில் 09 வயது பிரிவின் கீழ் விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி முபீன் பாத்திமா சபிலுல் லமாஹ் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
- Advertisement -