அரச பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை முக்கியம் – அதனால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.
* ஓய்வூதியச் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு.
* பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு.
* அரச பணியாளர்களுக்கு முன்னரைப்போன்று இடர்கால கடன் மீண்டும் வழங்கப்படும்.
* அஸ்வெசும நிவாரணத்திற்காக மும்மடங்கில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும்.சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும். அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும், முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.
* கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு
* நிவாரணக்கடன்களுக்காக விசேட ஏற்பாடுகள்.சிறு நடுத்தர வர்க்க கைத்தொழில்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.