- Advertisement -
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை அனைத்து அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் 10,000 ஆல் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் சம்பளத்துடன் கொடுப்பனவு சேர்க்கப்படும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை ஒக்டோபர் மாதம் முதல் தவணை முறையில் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
- Advertisement -