உயர்தர வகுப்பில் சித்தியடையும் மாணவர்களுக்கு விசேட செயற்திட்டங்கள்.புதிய நான்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.
* விவசாயிகளின் காணி பிரச்சினையை தீர்க்க விசேட கொள்கை. அரச காணிகளை பயன்படுத்த தீர்மானம்
* அரச தொடர்மாடிகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் உரித்தாகும்.அவர்களிடம் இனி வாடகை அறவிடப்படமாட்டாது.
*பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கீடு.
* மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.
* மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு
* விசேட திட்டங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம் .அரச நிதி கட்டுப்பாடு உட்பட வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.
* வீதிகள், புனரமைக்க புனரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
* கல்வி மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு – அதற்காக விசேட திட்டம் வகுப்பு
* அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபா அரசு செலவிடும்.