- Advertisement -
திட்டமிட்ட குற்றவாளியான தற்போது சிறையில் உள்ள தெமட்டகொடை ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெமட்டகொடை வெலுவன வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஒரு பெட்ரோல் குண்டு வீட்டிற்குள் விழுந்துள்ளதுடன், ஏனைய இரண்டு பெட்ரோல் குண்டுகளும் வீட்டின் வாசலில் விழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -