- Advertisement -
ஹாலிஎல ரொக்கதென்ன தோட்டத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த விபத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், காயமடைந்த இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து எவரையும் வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை என ஹாலிஎல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -