Friday, December 8, 2023
Homeஇலங்கையாழில் சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டி-இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் பங்கு பெற்றலாம்..!

யாழில் சர்வதேச தரத்திலான சதுரங்க போட்டி-இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் பங்கு பெற்றலாம்..!

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டி சர்வதேச போட்டியாக அமையவுள்ளதால் எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் சர்வதேச போட்டிக்கான எமது இத்தனை வருட கனவை நேர்த்தியான முறையில் பூர்த்தி செய்ய அனைத்து தரப்பின் ஆதரவையும் கோரி நிற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தப் போட்டிகளுக்கான Gold Sponsor ஆக லைக்கா ஞானம் அறக்கட்டளையும், ஊடக அனுசரணையாளர்களாக ஆதவன் TV, ஆதவன் News – தமிழ் FM ஆகிய ஊடகங்களும் விளங்குவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

போட்டி தொடர்பிலான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் +94757466484 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது Jdcanew@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் , https://www.facebook.com/profile.php?id=100079627133737&mibextid=LQQJ4d எனும் தமது முகநூல் பக்கத்தின் ஊடாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments