வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும்.
அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் யோகம் தான் கஜகேசரி ராஜயோகம்.
இந்த ராஜயோகம் ஒரு சுப யோகம்.
இப்படிப்பட்ட கஜகேசரி ராஜயோகமானது தீபாவளி நாளான நவம்பர் 12 ஆம் திகதி நிகழவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் நல்ல பண வரவும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது தீபாவளி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையை வெற்றிகரமாக முடித்து, உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், தீபாவளிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த 4 ராசிக்காரங்க நண்பர்களை குடும்பத்தினர் போல நடத்துவாங்களாம். இவங்க நட்பு உங்க கிடைக்கிறது அதிர்ஷ்டம்!
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காலரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும்.
குடும்ப வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒன்றிற்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள்.
குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல இலாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.