- Advertisement -
கொழும்பு – கோட்டையில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மது அருந்திக்கொண்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன்,
இரண்டு பெண்கள் உட்பட மூவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
ரன்ன வாடிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றும்,
அவர்கள் அதிக விலை கொடுத்து ஏழு பாட்டில் மது அருந்தியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசேல மெண்டிஸ் வந்து தடயவியல் பரிசோதனை நடத்தினார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -