Ads
Home இலங்கை ஒரே இரவில் செலவந்தனாக மாறிய மீனவன்..!

ஒரே இரவில் செலவந்தனாக மாறிய மீனவன்..!

0
49
Ads

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாஜி பலோச் என்ற மீனவர் ஒருவரே இவ்வாறு பணக்காரர் ஆகியுள்ளார்.

Ads

 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹாஜி பலோச் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தொழிலாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை (06-11-2023) அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது அவர்களின் வலையில் தங்க மீன் அல்லது “சோவா” என்று அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் சிக்கியுள்ளது.

 

பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ எடை மற்றும் 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

அந்த சோவா மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், விலைமதிப்பற்றதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது.

இதேவேளை, குறித்த மீனின் வயிற்றில் உள்ள பொருட்கள் நோய்களை குணப்படுத்தும் திறன் பெற்றதாகும்.

குறிப்பாக, மீனில் உள்ள நூல் போன்ற ஒரு பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும பயன்படுத்தப்படுகிறது.

 

இத்தகைய அரிய வகை மீன்களை இன்று காலை கராச்சி துறைமுகத்தில் ஹாஜி பலோச் ஏலம் விட்டுள்ளார்.

எலத்தில் குறித்த மீன்கள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. ஒரு மீன் மட்டும் சுமார் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

 

இதன்மூலம் ஒரே நாள் இரவில் ஹாஜி பணக்காரர் ஆகியிருக்கிறார். மீன்களை ஏலம் விட்டதன்மூலம் கிடைத்த பணத்தை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.

Ads

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here