Ads
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இடைநிறுத்தியுள்ளது.
Ads
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக (10) ஐசிசி சபை கூடி தீர்மானித்துள்ளது.
அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகித்தல் மற்றும் கட்டுப்பாடு, ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Ads