Ads
Home இலங்கை மர்ம பொதியால் விமான நிலையத்தில் பதற்றம்..!

மர்ம பொதியால் விமான நிலையத்தில் பதற்றம்..!

0
33
Ads

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Ads

இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி  (10) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பித்தது.

ஓடு பாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்மப் பொதியொன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

விமானத்திற்குள் வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தை அடுத்து, சென்னைக்கான பயணத்தை இடைநிறுத்தி, விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பான இடத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்த பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதுடன், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் விமானத்திற்குள் அழைக்கப்பட்டு சோதனைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பொதி தொடர்பில் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது, குறித்த பொதியிலிருந்து  2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அவை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

விமானம் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை நோக்கி குறித்த விமானம் மாலை 4.43 க்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Ads

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here