Monday, December 11, 2023
Homeஇலங்கை15 வருடங்களின் பின் மூன்று விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விடுதலை..!

15 வருடங்களின் பின் மூன்று விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விடுதலை..!

- Advertisement -

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments