Sunday, December 3, 2023
Homeஇந்தியாதண்டவாளத்தில் உடலங்களாக மீட்கப்பட்ட இரு தமிழ் மாணவர்கள்..!

தண்டவாளத்தில் உடலங்களாக மீட்கப்பட்ட இரு தமிழ் மாணவர்கள்..!

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அன்னம் சாய் வெங்கடசக்தி, சாய் சக்தி ஆகிய இருவர் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த இருவரும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து புதுச்சேரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடகைக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கிய நிறுவனத்தில் இருந்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருவள்ளூர் மற்றும் சென்னை செல்வதாகக் கூறிவிட்டு, பாண்டிச்சேரி சென்றதன் காரணம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை புதுச்சேரியில் நிறுத்திவிட்டு, நேற்று முன்தினம் ரயிலில் வந்ததாக தெரிகிறது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸார், உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments