- Advertisement -
யாழ் காரைநகர் 782 பேரூந்து சேவையின் நிலையற்ற கட்டண அறவீடு தொடர்பாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
ஒரு தனியார் பேரூந்தில் காரைநகரில் இருந்து சங்கானை செல்வதற்கு 80 ரூபா கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்.பின் சங்கானையிலிருந்து காரைநகர் வருவதற்கு 100 ரூபா கட்டணம் அறவிட்டதாக குறிப்பிடுகிறார் குறித்த பயணி.
தனியார் பேரூந்திற்கு நிலையான கட்டணப்பட்டியல் இல்லையா என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தமது விருப்பிற்கு தனியார் பேரூந்துகள் கட்டணம் வசூலிக்கிறார்கள் என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
வறுமையில் ஏழ்மையிலும் பேரூந்தில் பயணிக்கும் மக்களிடம் இவ்வாறான செயற்பாடுகள் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
- Advertisement -