- Advertisement -
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் கீர்த்தனா (19). இவர், கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கீர்த்தனா வகுப்புக்குச் செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். அவருடன் தங்கியிருந்த 2 மாணவிகள் வகுப்புக்குச் சென்று விட்டு, மாலையில் விடுதிக்கு வந்து பார்த்த போது, மாணவி கீர்த்தனா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக் கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
- Advertisement -