காலி, அஹுங்கல்ல – வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நபரொருவர் வாங்கிய முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் (09-11-2023) மீன் வியாபாரி ஒருவர் சாப்பிட்ட முட்டை ரோல்ஸில் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முட்டை ரோல்ஸ் சாப்பிடும் போது, முட்டையை எவ்வளவு கடித்தும் உடையததால், அதனை கையில் எடுத்து பார்க்கும் போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முட்டை என தெரியவந்து என மீன் வியாபாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மீன் வியாபாரி முட்டை பகுதியை எரித்ததாகவும் ஆனால் அது எரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அஹுங்கல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
முட்டையின் பாகத்தின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.