பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சி வழக்கமான பரபரப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. காரணம், இந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒரு குழு.
அதுதான் மாயா, பூர்ணிமா, ஐசு, ஜோவிகா, நிக்சன் ஆகியோர் அடங்கிய குழு. இந்த குழுவில் இருக்கக்கூடிய போட்டியாளர்கள் தாங்கள் செய்வது தான் சரி என்ற நோக்கத்தில் செய்யக்கூடிய செயல்கள் அனைத்துமே திரையில் பார்க்கும் பொழுது மிக தவறாக தெரிகின்றது.
இவர்களை எதிர்க்கும் குழுவாக நடிகை விசித்ரா, சீரியல் நடிகை மற்றும் தொகுப்பாளினியான அர்ச்சனா, நடிகர் தினேஷ் கோபால்சாமி ஆகியோர் இருக்கின்றனர்.
இந்நிலையில், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு நேர்ந்த விஷயங்கள்.. தங்களுக்கு அநீதி நடந்து விட்டதோ..? என்று போட்டியாளர்கள் நினைக்கக்கூடிய விஷயங்களை.. ஒரு புகாராக எழுப்பி.. அதனை கோர்ட் டாஸ்க்கில் ஒரு நீதிபதியை நியமித்து அவர்கள் தீர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதில் முதல் ஆளாக போட்டியாளர் விஷ்ணு எழுப்பிய புகாரின் பேரில் பூர்ணிமா விசாரணை அழைக்கப்பட்டார். தன்னுடைய தோழி மாயாவை பற்றி கேவலமாக சில விஷயங்களை விஷ்ணுவிடம் பகிர்ந்து இருக்கிறார் பூர்ணிமா.
அவர்கள் செய்தது சரி கிடையாது, அவர் நட்பு என்பது தாண்டி நல்ல விளையாட்டை விளையாடுகிறார், எனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அவர் குரல் கொடுக்காமல் சிரிக்கிறார். என்றெல்லாம் விஷ்ணுவிடம் கூறியிருக்கிறார் பூர்ணிமா.
ஆனால, இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும் மற்ற எந்த போட்டியாருக்கும் தெரியாது எனவே பூர்ணிமா என்ன கூறினார் என்பதை பொதுவெளியில் இங்கே கூற வேண்டும் என விடாப்பிடியாக நின்றார் விஷ்ணு.
வீட்டுக்குள் உடன்பிறவா சகோதரிகள் போல ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை போல மாயா மற்றும் பூர்ணிமா அனைத்து விஷயங்களிலும் இருக்கின்றனர். ஆனால், பூர்ணிமா மாயா பற்றி கேவலமான சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்தும் மாயாவிடம் ஒட்டிக்கொண்டு உறவாடிக் கொண்டிருக்கிறார் என்பது விஷ்ணுவின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது குறித்து பூர்ணிமாவை கூண்டில் ஏற்றி கேள்வி எழுப்பிய பொழுது நான் மாயா-வை கேவலாமாக பேசவில்லை, நான் வேறு விதமாக பேசினேன், நீங்கள் நினைக்கும் அர்த்தத்தில் நான் பேசவில்லை.. என்று அப்படியே பல்டி அடித்து மாயாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.
மேலும் இது சார்ந்த குறும்படமும் எனக்கு வேண்டும் என அழுது அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அழு.. கத்தி அழு.. கதறி அழு.. ஊரை கூட்டி அழு.. என்று கலாய் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். என்ன நடக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.