நடிகை தபு பற்றி பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்.
அதனை தொடர்ந்து இருவர் சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் உள்ளிட்ட இன்னும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 52 வயதாகும் நடிகை தபு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வந்த நடிகை தபு அவரையே திருமணம் செய்து கொள்வதாக இருந்தார்.
ஆனால், கடைசியாக வேறு ஒரு நடிகையுடன் காதல் வயப்பட்டு போட்டு அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அந்த நடிகர்.
சமீபத்தில் கூட, அந்த நடிகர் தன்னை ஏமாற்றி விட்ட காரணத்தினால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அந்த தெலுங்கு நடிகர் தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றினார் என்று நான் இப்போது வெளியே கூறினால் அவருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்.
அவரை சுற்றி நல்ல குடும்பம் இருக்கிறது. எனக்கு குடும்பம் இல்லை என்பதற்காக அவருடைய குடும்பத்தை கெடுக்க விரும்பவில்லை என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
அந்த பிரபல தெலுங்கு நடிகர் வேறு யாரும் கிடையாது சமத்தான நடிகையின் முன்னாள் மாமனார் தான். இது பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.
இந்நிலையில், ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வரும் நடிகை தபு தற்பொழுது வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூட்டபில் பாய் என்ற திரைப்படத்தில் தன்னைவிட வயது குறைவான இளைஞருடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் அதிர வைத்திருந்தார்.
அப்போதே ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில், தற்போது 22 வயது ஆன இளம் நடிகர்களுடன் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க இருக்கிறார் தபு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸ் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்று தெரிகிறது.
கிட்டத்தட்ட தன்னைவிட 30 வயது குறைவான வாலிபருடன் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நடிகையை ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.