பிரபல செய்தி வாசிப்பாளரும் தொகுப்பாளினியுமான பனிமலர் பன்னீர்செல்வம் அவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
சமீபகாலமாக, A.I தொழில்நுட்பம் மற்றும் DeepFake மென்பொருட்கள் கொண்டு பிரபலமாக இருக்கும் நடிகைகள், மாடல் அழகிகள், இணைய பிரபலங்களின் முகத்தை வேறொரு உடலில் ஒட்டவைத்து மோசமான வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிடும் ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் அந்த DeepFake மென்பொருள்கள் இலவசமாகவே ஆன்லைனில் கிடைக்கின்றன என்பதுதான். எந்த ஒரு விதிமுறை இல்லாமல் இந்த மென்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது பனிமலர் பன்னீர்செல்வத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் யாரோ எடிட் பண்ணிட்டாங்க என்று பதறி வருகின்றனர்.
ஆனால் இது A.I எடிட் செய்த வீடியோவோ அல்லது DeepFake செய்யப்பட்ட வீடியோவோ கிடையாது. ஒரிஜினல் வீடியோவே தான்.
இந்த வீடியோ காட்சி பார்த்து ரசிகர்கள்தான் இப்படி பதறி வருகின்றனர். காரணம் தன்னை ஒரு தீவிரமான பெரியாரியவாதியாகவும், கடவுள் மறுப்பாளராகவும் இத்தனை நாட்களாக காட்டிக் கொண்டிருந்த பனிமலர் பன்னீர்செல்வம் திடீரென கோயில் பூஜை, புனஸ்காரம் என சுற்றிக் கொண்டிருக்கிறார்
இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் பதறாமல் என்ன செய்வார்கள்..? யாரோ எடிட் செய்து விட்டார்கள்..A.I வீடியோ என்று பல வகைகளில் கதறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.