நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஜிம் மாஸ்டர் கூறிய சில ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.
நான் சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து இப்போது வரை டயட் என்ற ஒரு விஷயத்தை செய்ததே கிடையாது.
நான் நிறைய சாப்பிடுவேன் சாப்பிடுவதற்கு லிமிட் என்று எனக்கு எதுவும் கிடையாது. நிறைய சாப்பிடுவேன். ஆனால் அதே போல உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்யும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.
உடல் எடை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. ஏனென்றால் என்னுடைய ஜிம் மாஸ்டர் கூறியிருக்கிறார். உடம்பு ஒல்லியாகிவிட்டால் ரசிகர்களுக்கு உன்னை பிடிக்காது.. இப்போதுதான் சரியான தோற்றத்தில் இருக்கிறாய்.
இதே தோற்றத்தில் இரு இதைவிட உடல் எடையை குறைத்தால் ரசிகர்களுக்கு உன்னை பிடிக்காது குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படி பூசினார் போல் இருக்கும் பெண்களை தான் பிடிக்கும். ஒல்லியாக இருக்கும் பெண்களை சுத்தமா பிடிக்காது என என்னுடைய ஜிம் மாஸ்டர் கூறியிருக்கிறார்.
எனவே நான் ஒல்லியாகும் முயற்சியில் ஈடுபடவில்லை. கனா திரைப்படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சற்று உடல் எடை குறைத்து இருந்தேன்.
அதன் பிறகு மீண்டும் உடனடியாக ஏற்றி விட்டேன். எனவே எனக்கு டயட் என்பது தேவையில்லாத ஒன்று எண்ணமே தோன்றியது. ஆனால், அதிக உடல் எடை கூடிவிடக்கூடாது என்பதற்காக அன்றாடம் உடற்பயிற்சி செய்வது வாடிக்கையாக வைத்திருக்கிறேன் எனக்கு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.