பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டிருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் நிக்சன் சக பிக் பாஸ் போட்டியாளர் விநுஷா என்பவரை மோசமாக வர்ணித்த சம்பவத்தை அரங்கேற்றம் செய்துள்ளார் பிக்பாஸ்.
அதாவது, போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமல் பேசிய மோசமான வசனங்கள் வார்த்தைகளை ஒளிபரப்பி பிக்பாஸ் ஒளிபரப்புவார்.
இதனை யார் பேசியது..? என்று அவர்களாகவே முன்வந்து அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அந்த வகையில், பிக்பாஸ் நிக்சன் பேசிய விஷயத்தையும் ஒளிபரப்பு செய்திருக்கிறார்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் புதிதாக எப்படி ஒரு பிரச்சினையை கோர்த்து விட்டிருக்கிறார் பிக்பாஸ். இது சக பிக்பாஸ் போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும், இத்தனை நாட்களாக ஒன்றும் தெரியாத அம்மாஞ்சி போல.. பூனை மூஞ்சியை வைத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை சுற்றிக் கொண்டிருந்த நிக்சன்.. ஒரு தலைப்பட்சமாக காதலிக்கும் ஐஷு-விடம் சக பெண் போட்டியாளர் குறித்து அவருடைய உடலை மோசமாக வர்ணித்த வார்த்தைகளை ஒளிபரப்பு செய்து பங்கம் செய்திருக்கிறார்.
இந்த காட்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், இதெல்லாம் பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பட்டியலில் வராதா..? இதற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதுதான் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.