சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் கலகலப்பான சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அதற்கு அவர், என்ன பதில் அளித்தார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
உங்களை ஒரு ஸ்ட்ரிக்ட்டான பெண்ணாக பார்க்க முடிகிறது. ஆனால், சாலையில் செல்லும் பொழுது அல்லது ஷாப்பிங் செல்லும் பொழுது என ஆண்களை சைட் அடித்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லிஜோ மோல் ஜோஸ். அச்சச்சோ… அப்படி எல்லாம் செய்தது கிடையாது.. எனக்கு அந்த பழக்கம் கிடையாது எனக்கூறினார். அதன் பிறகு மீண்டும் நிஜமாகவே சைட் அடித்தது கிடையாதா..? சைட் அடிப்பது என்றால் நின்று பார்ப்பதல்ல ஒரு முறை பார்த்த ஆணை மறுமுறை நீங்கள் பார்த்தால் அதுதான் சைட் என கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.
இல்லை எனக்கு திருமணம் ஆகிவிட்டது. இது தெரியாம தான் இப்படி கேக்குறீங்க போல என கூறினார். ஓஹோ.. திருமணம் செய்து கொண்டதால் தான் சைட் அடிக்கவில்லையா..? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.. இல்லை இல்லை நான் திருமணத்திற்கு முன்பும் அதை செய்தது கிடையாது தற்போதும் இதனை செய்வது கிடையாது என கூறியுள்ளார்