பிரபல நடிகை அனிதா சம்பத் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்தவர். செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ஆரம்பித்து தற்போது நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அனிதா சம்பத்.
தன்னுடைய காதலர் குறித்து பல்வேறு இடங்களில் நடிகை அனிதா சம்பத் தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
நீ கலராக இருக்கிறாய் உன்னுடைய காதலன் கருப்பாக இருக்கிறார். எதற்காக இவரை நீங்கள் காதலிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் எனக்கு ஒரு மோசமான உணர்வு ஏற்படும். அவர்களுக்கெல்லாம் இதன் மூலம் நான் பதில் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஒருவரடைய அழகைப் பார்த்து காதல் செய்திருந்தால் என்னிடம் பணம் இல்லாத அவர் என்னுடன் இருப்பாரா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால், என் கையில் ஒரு பைசா பணமில்லை என்றாலும் என்னுடைய பிரபாகரன் எனக்காக இருப்பார் என உருக்கமாக பேசியிருந்தார் அனிதா சம்பத்.
இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது என்றாலும் கூட இதுவரை இவருக்கு இன்னும் குழந்தை இல்லை. இது குறித்து நடிக்க அனிதா சம்பத் பெரிதாக எங்கும் பேசியதில்லை.
ஒரே ஒருமுறை இன்ஸ்டாகிராம் ஃபில்டர் ஒன்றில் விளையாடிய பொழுது நடிகை அனிதா சம்பத்திற்கு பிரக்னன்சி டெஸ்ட் கார்டில் இரண்டு கோடுகள் வந்துவிட்டது. இதனால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அந்த ஃபில்டர் கேம் கூற.. அதனை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை அனிதா சம்பத்.
ஆனால் ரசிகர்கள் பலரும் நடிகை அனிதா சம்பத் நிஜமாகவே கர்ப்பமாகிவிட்டார் போல் தெரிகிறது என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். ஆனால் விவரமாக அனிதா சம்பத் கூறிய பிறகு தான் ரசிகர்களுக்கு விஷயமே தெரிய வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் Instagram மற்றும் Youtube தளத்தில் பிரபலமாக இருக்கும் Poli Couple என்ற பெயரில் இயங்கக்கூடிய தம்பதியினர் கேளிக்கையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் கோழி முட்டை போட்டதா ஆண்ட்டி.. கோழி முட்டை போட்டதா ஆண்ட்டி.. என்று ஒரு ஆண்டியிடம் தினமும் சென்று நச்சரிப்பது போலவும்.. இதனால் கடுப்பான அந்த ஆண்ட்டி கோழி முட்டை போடும்போது தான் போடும்.. தினமும் போடுமா..? என்று கூறுவார்.
அந்த நேரத்தில், அதேபோல நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது பெற்றுக் கொள்வோம்.. சும்மா எப்ப பார்த்தாலும் எப்போ குழந்தை எப்போ.. குழந்தை எப்போ.. என கேட்டா குழந்தை வந்துருமா..? முட்டை போடுற கோழிக்குத்தான் தெரியும் ***** என ஒரு வீடியோ காட்சி வைரலானது.
இதனைப் பார்த்து அனிதா சம்பத். இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது என கமெண்ட் செய்திருக்கிறார்.