நடிகை பிரகீலா சாகா இரவின் நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற அனுபவங்கள் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, இரவில் நிழல் வழக்கமான படங்கள் போல இல்லை. அது ஒரு நான்-லீனியர் படம்.. சொல்ல போனால் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முழு திரைப்படம்.
அப்படியான படத்தில் ஒத்திகை என்பது மிக நீளமானது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது பத்து நிமிடம் 20 நிமிடம் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சின்ன தவறு ஏற்பட்டால் கூட மீண்டும் முழு படத்தையும் முதலில் இருந்து படமாக்க வேண்டும்.
இதற்காக ஒத்திகை மட்டுமே நாங்கள் 19 மணி நேரம் பார்த்திருக்கிறோம். ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டால் கூட மீண்டும் இரண்டு கிலோமீட்டர் முன்னாடி சென்று அங்கிருந்து அனைத்து கட்சிகளையும் ஒவ்வொன்றாக படமாக்கி கொண்டு வர வேண்டும்.
ஒரு முறை நடிக்கலாம் இரண்டு முறை நடிக்கலாம் ஆனால் மூன்றாவது முறை நான்காவது முறை மீண்டும் அதே காட்சியை நடிக்கும் போது நடிகர்கள் ஒரு விதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுவார்கள்.
அவர்களுடைய உணர்வுகள், ரியாக்ஷன்கள், கண் அசைவுகள் அனைத்தும் மிகச் சரியாக வருமா..? என்று கேட்டால் கடினமான விஷயம் தான். ஒரு விதமான மன அழுத்தத்திற்கு நடிகர்கள் ஆளாகி விடுவார்கள்.
ஆனால், 24-வது டேக்கில் தான் இந்த ஒட்டுமொத்த படமும் முழுமையாக எடுக்கப்பட்டது. ஒத்துகையின் போது 20 பேர் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நான் அமர்ந்திருந்த காட்சிகளை படமாக்கினார்கள்.
எனக்கு பயம் எல்லாம் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் அமர்ந்திருக்கிறோமே என்று கிடையாது. ஆனால் மீண்டும் இந்த காட்சி படமாக்கப்படுமோ..? என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
ஏனென்றால் நான் முன்பு கூறியது போல சிறு பிழை ஏற்பட்டால் கூட மீண்டும் அந்த காட்சியை முதலில் இருந்து நடிக்க வேண்டியது இருக்கும்.
இதில் சக நடிகர்கள் பட்ட கஷ்டத்தை விடவும் இயக்குனராக நடிகர் பார்த்திபன் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் கூறியது போல காட்சிகள் வந்து கொண்டிருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் சிறு பிழை ஏற்பட்டு விட்டால் கூட மீண்டும் படமாக்க வேண்டி இருக்கும் என்பதால் அந்த இடத்தில் அழுது இருக்கிறார்.
அதனை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். நடிகையாக மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும் அந்த படத்தில் பணியாற்றியதால் பார்த்திபன் சாரின் வேதனையை நான் உணர்ந்தேன். இந்த படத்தின் மூலம், மிகப்பெரிய அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது என பேசி இருக்கிறார்.