தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களைப் பற்றி வந்த வதந்திகளில் எது உங்களை மிகவும் காயப்படுத்திய வதந்தி என்ன…? கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்திருக்கின்றது. வதந்திகள் வந்திருக்கின்றது. இதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக கவலை கொண்டது கிடையாது. வருத்தப்பட்டது கிடையாது.
நிறைய முறை எனக்கே தெரியாமல் எனக்கு இன்னாருடன் திருமணம் நடந்து விட்டது என்று தகவல்களை ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றன. எனக்கு திருமணம் ஆகி விட்டதா..? என்று நானே வியப்புடன் பார்த்த நாட்களெல்லாம் இருக்கின்றது.
ஆனால், தற்போது இது எனக்கு பழகிவிட்டது. என்னை காயப்படுத்திய வந்ததி என்ன என்று கேட்டால்… ஒருமுறை என்னை பற்றி வெளியான செய்தி என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
என்ன காரணம் என்றால்.., என்னுடைய ஆண் நண்பர் ஒருவருடைய பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தும் விதமாக என்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அவருடைய புகைப்படத்தை வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தேன்.
ஆனால், அந்த நபரை தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அவருடைய புகைப்படத்தை மீடியாக்கள் சில செய்தியாக வெளியிட்டன. இது மிகப்பெரிய பிரச்சனையானது.
என்னுடைய நண்பரின் காதலி எனக்கு போன் செய்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு என்னுடைய ஆண் நண்பரின் குடும்பத்தினர் எனக்கு போன் செய்து அவர்களுடைய கஷ்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அந்த விஷயம் என்னை மட்டும் நேரடியாக பாதித்திருந்தால். அது என்னோடு போயிருக்கும். நான் பெரிதாக கண்டுகொண்டிருக்க மாட்டேன். ஆனால், என்னுடைய ஆண் நண்பரின் குடும்பத்தை இது வெகுவாக பாதித்திருக்கிறது.
அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது..? என்று தெரியவில்லை. ஆனாலும், என்னுடைய சூழ்நிலையை அவர்கள் புரிந்து கொண்டு நடந்து கொண்டார்கள் என பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.