இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிவதும் வாடிக்கை. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி உடைகளை அணிகிறீர்கள்…? உங்களுடைய பேஷனுக்கான இன்ஸ்பிரேஷன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை அபிராமி எனக்கு பேஷன் இன்ஸ்ரேஷன் என்று யாரும் கிடையாது. எனக்கு பிடித்த ஆடைகளை நான் இப்படித்தான் போடுவேன் பார்க்கிறவன் பாரு.. பாக்காதவன் போயா.. என்பதுதான் என்னுடைய கொள்கை.
இவர்களைப் பார்த்து அணிந்தேன்.. இவர்களை பார்த்து இதை கற்றுக் கொண்டேன்., என்றால் அப்படி எதுவும் கிடையாது. எனக்கு பிடித்த ஆடைகளை எனக்கு பிடித்த வகையில் நான் உடுத்துவேன்.
குறிப்பிட்டு சொல்லப் போனால் சிலர் ஆடைகள் எனக்கு பிடிக்கும். ஆனால், அதை நான் இன்ஸ்பிரேஷனா எடுத்துக் கொண்டேனா என்றால் அப்படி சொல்ல முடியாது.
நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாரா பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இவர்களுடைய ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை நான் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொள்வது கிடையாது என்று பேசியிருக்கிறார் அபிராமி.