ஆடிசன் நடந்தது சிறிது நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார்.
நானும் உள்ளே சென்றேன். நான் உள்ளே சென்றதும் அங்கிருந்து துணை இயக்குனர் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டார். அனைவரும் வெளியே சென்று விட்டனர். அந்த அறையில் நானும் இயக்குனர் மட்டும்தான் இருந்தோம்.
அப்போதே எனக்கு ஒரு மாதிரி பயமாக இருந்தது. பெரிய இயக்குனர் என்பதால் மறுத்து பேசவோ..? அல்லது அங்கிருந்து கிளம்பவோ.. எனக்கு மனம் வரவில்லை.
சொல்லுங்கள் சார் என்று கூறினேன். நாளை நீங்கள் நர்ஸ் உடைய அணிய வேண்டும் அதனால் தான் அழைத்தேன் என்று கூறியவர் என்னுடைய பேண்டை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார்.
எதற்கு சார் என கேட்டேன். நர்ஸ் உடை சரியாக இருக்குமா..? என பார்க்க வேண்டும் என கூறினார். சரி என் பேண்டை நானும் தூக்கி காட்டினேன்.
அதன் பிறகு முட்டிக்கு மேல் தூக்கி காட்டுங்க என்று கேட்டார். அதன் பிறகு தான் அவர் எந்த நோக்கத்தில் கேட்கிறார். அவர் என்ன முயற்சி செய்கிறார் என்பது எனக்கு புரிந்தது.
நாளை வந்து நர்ஸ் ஆடையை அணிந்தே காட்டுகிறேன் என்று உடையை சரி செய்து கொண்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்.
அதன்பிறகு அந்த படத்தில் நடிக்க நான் சொல்லவே இல்லை. தொலைபேசி அழைப்பு வந்தது அதனையும் நான் கண்டு கொள்ளவில்லை எனவே பேசி இருக்கிறார் அர்ச்சனா.