சுஹாசினி கூறியது என்னவென்றால், நான் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த காலம். அப்போது கமல் நான் புது கார் வாங்கி இருக்கிறேன். நான் உன்னை கல்லூரியில் ட்ராப் செய்கிறேன் என்று கூறி கூறினார்.
அப்பொழுது கராத்தே செய்யும்போது அணியக்கூடிய ஆடை போன்ற ஒரு ஆடையை மேலே அணிந்திருந்தார். கீழே எதுவும் அணியவில்லை. அப்படியே என்னை கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.
தயவு செய்து பேண்டை போட்டுக் கொண்டு வாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால் நான் ஒரு பெரிய நடிகர்.. இப்படியான பொது வெளியில் இறங்குவேன். நான் காரை விட்டு கூட இறங்க மாட்டேன். அதுவும் பெண்கள் கல்லூரியில் நான் நிச்சயமாக இப்படி எல்லாம் செய்ய மாட்டேன். வா கிளம்பலாம் என்று கூறினார். நானும் கிளம்பினேன்.
கல்லூரிக்குள் கார் சென்று நின்றது. ஆனால், எனக்கு முன்பே அவர் காரை விட்டு இறங்கி என் பக்கம் இருக்கும் கதவை திறந்து விட்டார். எனக்கு ஒரே கூச்சமாகி போய்விட்டது. கல்லூரியில் இருந்து அனைவரும் கமலஹாசனை தான் பார்க்கிறார்கள்.
ஏன் இப்படி பண்றீங்க..? என்று கேட்டேன் உடனே அவர் உள்ளே சென்று அமர்ந்து விட்டார். என்று பேசியிருக்கிறார். பெண்கள் கல்லூரி என்றும் பாராமல் இப்படி செய்த கமல்ஹாசன் தான் தற்போது பெண்கள் பாதுகாப்பு பற்றி வகுப்ப்பெடுத்து கொண்டிருக்கிறார் என்று மோசமான கருத்துக்களை கொண்டு கமல்ஹாசன் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.