பிரபல தொகுப்பாளினி VJ ரம்யா ஐஸ் குளியல் செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
ஒரு பேரல் முழுதும் தண்ணீரை நிரப்பி அதில் சில பாக்கெட் ஐஸ் கட்டிகளை போட்டு அதில் எதிரி குதித்து ஜல கிரீடை செய்யும் விஜே ரம்யாவின் இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
உடல் நலத்தை பேணுவதில் அதிக அக்கறை கொண்டிருக்கும் நடிகை VJ ரம்யா உடல் எடை குறைப்பது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி உள்ளிட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
இந்த புத்தகங்கள் ஆன்லைனில் விற்பனைக்கும் கிடைக்கின்றன., அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீர தீர செயல்களை பலரும் செய்ய தயங்கும் அல்லது செய்ய முடியாத விஷயங்களை செய்து அசத்துகிறார்.
கடினமான உடற்பயிற்சிகளை இலகுவாக செய்து முடிப்பதில் ஆரம்பித்து தற்பொழுது ஐஸ் கட்டி நிறைந்த பேரலில் எகிரி குதித்து அதில் சில நிமிடங்கள் குளியல் போட்டது என ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து போய் தான் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். அடிக்கும் குளிரில் ஐஸ் கட்டி குளியலா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.