பிரபல நடிகரும், பிரபுதேவா-வின் தம்பியும், நடன இயக்குனமான நாகேந்திர பிரசாத் வீடு வாடகைக்கு கொடுப்பதாக கூறி தம்பதி ஒருவரிடம் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார் என்று புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
அவருடைய வீட்டில் குடியிருந்த தம்பதி சில மாதங்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு விடப்படும் என்று தொலைபேசி எண்ணையும் அச்சிட்டு விளம்பரம் செய்திருக்கிறார் நடிகர் நாகேந்திர பிரசாத்.
இதனை பார்த்து இந்த தம்பதி குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அழைப்பு விடுத்த போது நான் ஒரு பிரபலம் எனவே நான் நேரடியாக வாடகை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடமாட்டேன். நடுவில் ஒரு கம்பெனி இருக்கிறது அந்த கம்பெனியிடம் நீங்கள் அட்வான்ஸ் வாடகை அனைத்தையும் அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து நான் வாங்கிக் கொள்வேன் என கூறியிருக்கிறார்.
அதற்கு இந்த தம்பதி வீட்டில் உரிமையாளர் நீங்கள்… நான் வாடகைக்கு குடி இருக்க போகிறேன்.. நேரடியாக உங்களிடமே கொடுத்து விடுகிறேனே.. நடுவில் எதற்கு இன்னொரு கம்பெனி என்று கேள்வி எழுப்பிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த நாகேந்திர பிரசாத் கம்பெனியிடம் நாங்கள் வாடகை வாங்குவது தான் சிறப்பானது. அவர்கள் தான் எங்களுக்கு அதிகமான வாடகை கொடுக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், வாடகைக்கு எடுத்த சில மாதங்களிலேயே அந்த கம்பெனி எங்கே இருக்கிறது கூட என்று தெரியாமல் போய்விட்டது. எங்களை தற்பொழுது வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள்.
நாங்கள் கொடுத்த 25 லட்சம் ரூபாய்க்கு யார் பொறுப்பு..? எங்கே எங்களுடைய 25 லட்சம் ரூபாய் எங்கே..? என்று நடிகரும் பிரபல நடிகர் பிரபுதேவாவின் தம்பியுமான நாகேந்திர பிரசாத் மீது புகார் கூறியிருக்கிறார்கள் இந்த தம்பதியினர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.