நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் இறங்குமுக்காம இருக்கின்றது. விரைவில் இவருடைய மார்க்கெட் காலியாகிவிடும் என்று கணிக்கிறார்கள்.
இதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரபல மருத்துவர் காந்தராஜ் சமீபத்திய ஒரு பேட்டில் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் என்ன தேவை.. அதனை நடிகைகள் அதை புரிந்து கொள்ளாமல் எப்படி எல்லாம் தங்களை வீணடித்திருக்கிறார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது நடிகைகள் கீர்த்தி சுரேஷ் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது. கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான போது எப்படி இருந்தார்.
ஆனால் தற்போது எப்படி இருக்கிறார்..? இதுதான் நடிகைகள் மார்க்கெட் காலி ஆவதற்கு காரணமாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் இருந்த இருப்புக்கு தற்பொழுது தமிழில் தொட முடியாத இடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.
தற்போது அவருடைய நிலை என்ன..? முன்னணி நடிகர்களின் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர் தன்னை அழகு படுத்துகிறேன் என்ற பெயரில் உடல் எடை குறைத்தது தான்.
பொதுவாக சினிமாவிற்கு வந்து தன்னுடைய பிரபலம் மெல்ல மெல்ல உயர ஆரம்பித்ததும் நடிகைகள் தங்களை அழகுப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்கள்.
இதற்காகவே பல அழகு நிலையங்கள், ஸ்டூடியோவில் இருக்கின்றது. அங்கே சென்றால் முதலில் இவர்களுடைய உடலை நாசம் செய்து விடுவார்கள். உடம்பை கெடுத்து விடுவார்கள்.
உடல் எடையை குறைத்து விடுவார்கள். நான் கேட்கிறேன், இப்போது உங்கள் உடல் எடையை குறைக்க சொல்லி யாரும் உங்களிடம் கேட்டார்கள்..? உடல் எடை குறைத்தால் அழகாக தெரிவோம்.. உடல் எடை குறைத்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.. என்று இவர்களாக நினைத்துக் கொண்டு உடல் எடையை குறைத்து கண்ணில் பார்க்க முடியாத அளவுக்கு ஆகி விடுகிறார்கள்.
உடல் எடையை குறைத்தால் தான் ஆரோக்கியமாக இருப்போம் என்றால் இதற்கு முன்பு நோயாளியாகவா இருந்தீர்கள்..? இப்படி உடல் எடையை குறைத்து விடுவதால், இதற்கு முன்பு அவர்கள் நடித்த படங்கள் என் பிரபலத்தின் துணைகொண்டு சில பட வாய்ப்புகள் கிடைக்கிறது. அதன் பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இப்படி சினிமாவில் அறிமுகமாக நடிகைகள் எப்படி இருக்கும் பொழுது தங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களோ.. அதே போல தங்களை மெயின்டைன் செய்ய வேண்டும்..
ஒரே ஒரு பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைக்க வேண்டும்.. ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்ற வேண்டும்.. இதெல்லாம் நடிகைகளுக்கு செட்டாகாத ஒரு விஷயம்.
கீர்த்தி சுரேஷாவது பரவாயில்லை. பிரியா பவானி சங்கர் நிலை இன்னும் மோசம். பிரியா பவானி சங்கர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டியவர்.
ஆனால், அவரும் இப்படித்தான் உடல் எடை குறைக்கிறேன்.. உடல் ஆரோக்கியம்.. என உடல் எடையை குறைத்து தற்பொழுது ஆளே மாறி விட்டார். இப்படித்தான் முன்னணி நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கெடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் மருத்துவர் காந்தராஜ்.