Saturday, December 9, 2023
Homeசினிமாதமிழ் மக்களின் பணம் வேணும் ஆனால் தமிழ் வேணாம்-தமிழை நாசம் செய்யும் முன்னணி நடிகர்கள்..!

தமிழ் மக்களின் பணம் வேணும் ஆனால் தமிழ் வேணாம்-தமிழை நாசம் செய்யும் முன்னணி நடிகர்கள்..!

- Advertisement -

சமீப காலமாக முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பை வைப்பது அதிகரித்து வருகிறது.

கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் JAILER நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் LEO தற்போது நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான வெளியாக உள்ள புதிய படத்தின் தலைப்பு THUG LIFE.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கக்கூடிய இந்த மூன்று நடிகர்களுமே தமிழ் சினிமாவின் அரசியல் களத்தை நோக்கி இருக்கக்கூடிய நடிகர்கள்.

நடிகர் கமலஹாசன் ஏற்கனவே கட்சி ஆரம்பித்துவிட்டார். நடிகர் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் என்று ஓட்டத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி கடைசி நேரத்தில் பின்வாங்கியவர்.

என்ன இருந்தாலும் நேரடியாக தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நடிகர்கள் இந்த மூன்று பேரும். ஆனால், இவர்களுடைய படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதற்கு கசக்கிறது.

தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் கடையின் பெயர் பலகையில் கூட அந்த மாநிலத்தின் மொழியில் தான் முதலில் கடையில் பெயர் எழுதப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற விதி இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் நிறைய கடைகள் தமிழில் பெயர் பலகைகள் கூட வைப்பது கிடையாது. சென்னையில் சில கடைவீதிகளில் உள்ளே நுழைந்தால் நிஜமாகவே தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா..? என்ற சந்தேகம் வரும்.

ஏனென்றால், எந்த கடையிலும் பெயர் பலகைகள் தமிழில் இருக்காது. இதுதான் இப்படி என்றால்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று கொண்டாடப்படும் நடிகர்கள் தங்களுடைய படங்களுக்கு தலைப்பை கூட தமிழில் வைக்காமல் தெனாவெட்டு காட்டுகின்றனர்.

ஒரு முறை, தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான பொழுது அத்தனை நடிகர்களும் தமிழில் பெயர் வைத்து தங்களுடைய தமிழ் பற்றை காட்டினார்கள்.

வரி விலக்கு கிடையாது என்றதும் தங்களுடைய தமிழ் பற்றை தூக்கி பரணில் வைத்து விட்டு தங்களுக்கு ஏற்றார் போல ஆங்கிலத்தில் பல தலைப்புகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது..? தமிழ் வளர்ச்சி.. தமிழ் வாழ்க.. தமிழ் வளர்க.. என்று பல்கலைக்கழகங்களிலும்.. அரசு அலுவலகங்களிலும் பலகைகளை வைத்தால் மட்டும் போதுமா..?

அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா..? நிச்சயமாக கடையின் பெயர்கள் பெயர் பலகைகள் கடையின் பெயர் முதலில் தமிழில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.. அதன் பிறகு தான் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டமும்.. தமிழ் சினிமாக்கள் தலைப்பு தமிழில் தான் இருக்க வேண்டும் என்ற சட்டத்தையும் இயற்றுவதில் என்ன பெரிய தவறு இருக்கப்போகிறது என பலரும் தங்களுடைய இணைய பக்கங்கள் வாயிலாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments